பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!!

   -MMH 

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள, தற்காலிக ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு, வால்பாறை செல்லும் முக்கிய வழித்தடமாக இருந்தது. இந்த ரோட்டில் கடைகள் அதிகளவு உள்ளதால், வால்பாறை செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், இந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் தினேஷ்குமார், கிழக்கு மற்றும் போக்குவரத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ரோட்டில் இருந்த தற்காலிக கடைகள், கடைகள் முன் உள்ள ஷெட் உள்ளிட்ட தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

கடைக்காரர்களிடம், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டை ஆக்கிரமிக்க கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.அதிகாரிகள் கூறுகையில், "கலெக்டரின் உத்தரவுப்படியும், சாலைப்பாதுகாப்பு கூட்டு நடவடிக்கையாக, தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இப்பகுதியில், வாகன 'பார்க்கிங்' செய்வது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்," என்றனர்.

நாளைய வரலாறு செய்திக்களுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.

Comments