ஆனைமலை மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாட்டையால் அடித்து வினோத வழிபாடு..!!

 -MMH 

   கோவை மாவட்டம் ஆனைமலை நகரில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில் இந்த வருடத்தின் திருவிழா  தற்பொழுது நடைபெற்று வருகிறது.  இந்தத திருவிழாவின் ஏழாம் நாள் வழிபாட்டு நிகழ்ச்சியாக பக்தர்கள் அவர்களை அவர்களே சாட்டையால் அடித்து அம்மனை வழிபடும்  வினோத வழிபாடு  நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி  ஏப்ரல் 26ஆம் தேதி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு   எட்டு மணியளவில் ஆனைமலை  மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது. பக்தர்கள் இந்த சாட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அலாவுதீன் ஆனைமலை..

Comments