உடுமலை தளி ரோடு மேம்பாலத்துக்கு மு.கருணாநிதியின் பெயர்!

-MMH
            உடுமலை நகர்மன்றத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவர் மு.மத்தீன் 5 சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். விவரம்:

உடுமலை தளி ரோடு மேம்பாலத்திற்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பெயர்

தங்கம்மாள் ஓடை வீதிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயர் 

பைபாஸ் ரோட்டிற்கு புனிதர் எஸ்.ஜே.சாதிக்பாட்சா பெயர் வைக்கப்படுகிறது.

உடுமலை நகராட்சி பழைய கட்டடமான தாகூர் மாளிகையின் முன் பகுதியில் செம்மொழி பூங்கா அமைப்பது எனவும், மாளிகையின் உள் பகுதியில் உடுமலையின் சரித்திரத்தை அறிந்து கொள்ளும் வகையில் அரிய புகைப்படங்கள், ஆவனங்கள் கல்வெட்டுக்கள் அமைப்பது.

உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேரோட்டம் நடக்கும் அனைத்து வீதிகளையும் அகலப் படுத்தி உயர்தரம் கொண்ட கான்க்ரீட் சாலைகள் அமைக்கவும், தேரோடத்தை மக்கள் பார்வையிட வசதியாக நடைபாதைகள், மின் விளக்குகள் அமைப்பது.

உடுமலை தாராபுரம் சாலையில் பழைய குப்பைக் கிடங்கில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி மொத்த காய்கறி வியாபார சந்தை, பூ மார்க்கெட் உள்ளிட்ட வைகள் அமைத்திட வணிக வளாகங்கள், குளிர் சாதன கிடங்குகள் அமைத்து உடுமலை மார்க்கெட் என்ற திட்டத்தை செயல்படுத்துவது.

உடுமலை நகரில் உள்ள 33 வார்டுகளிலும் நம்ம உடுமலை திட்டத்தில் பசுமை நகரமாக மாற்றுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

-துல்கர்னி உடுமலை.

Comments