உலக நன்மை வேண்டி பால்குடம் திருவீதி உலா....! பம்பை இசை முழங்க நடமாடிய பெண்கள்....!

     -MMH 

   கோவையில் உலக நன்மை வேண்டி 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்கள் எடுத்து நடனமாடியபடி திருவீதி உலா வந்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. 

கோவையில் உலக புகழ் பெற்ற அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் ஏழு மலைகளை கடந்து பக்தர்கள் காவடி எடுத்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வணங்குவர். அதன் ஒரு பகுதியாக வெள்ளியங்கிரி ஆண்டவர் காவடிபக்தர்களின் அன்னதான கமிட்டியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதன் தலைவர் ரவி தலைமையில் இன்று முதல் 10நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை விளாங்குருச்சி பகுதியில் உலக நன்மை வேண்டி 500க்கும் மேற்பட்ட பெண்கள் இருகூர் வீரப்பன் பம்பை இசை முழுங்க பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து நடனமாடியபடி  திரு வீதி உலா வந்தனர். வாணவேடிக்கை முழங்க வெகு விமர்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பகத்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

- சீனி,போத்தனூர்.

Comments