இளம் கல்லூரி மாணவர்கள் தயாரித்த தமிழ் திரைப்படம்!!

   -MMH 

   இளம் கல்லூரி மாணவர்கள் தயாரித்த தமிழ் திரைப்படம், இந்த மாதம் இருதியில் திரையிட பட உள்ளதாக, ஈரோடு அம்மன் கல்லூரியின் பேராசிரியர்  ராஜேஷ் கோவையில் பேட்டி.

கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ஆடிஸ்வீதி பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு மாவட்டடத்தில் உள்ள அம்மன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் கூறுகையில்.. 

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிவிழா கண்ட ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது  25,000க்கும் மேற்பட்ட  மாணவர்களை, தொழில் முனைவோர்களாகவும், பல்வேறு நிறுவனங்களிலும், வழக்கறிஞர்களாகவும் பணியாற்ற வழிவகை செய்துள்ளது, இக்கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேஷன் துறை பல ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறது, இதில்  முன்னணி நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குநர்களைக் கொண்டு கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இங்கு பயின்ற மாணவர்கள், கதாநாயகர்களாகவும், எடிட்டிங், டப்பிங் போன்ற சினிமா சார்ந்த பல துறைகளில் வெற்றிகரமாக பணிபுரிந்து வருகின்றனர், இந்நிலையில், இந்தத் துறை மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கல்லூரிமாணவர்கள்  'அமைச்சர்' என்கிற தமிழ் திரைப்படத்தை,  தயாரித்து உள்ளனர், இந்தப் படத்தில் கேமரா, வசனம், தொழில்நுட்ப உதவிகள் என்று அனைத்திலும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர், தமிழக வரலாற்றிலேயே மாணவர்கள் உருவாக்கிய படமாக  இத்திரைபடம் இடம் பெற்றுள்ளது, 

இத்திரைப்படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாகவும், அக்ஷயா கதையின் நாயகியாகவும், தேவிகா கதையின் இரண்டாம் நாயகியாகவும், சர்வதேச விளையாட்டு வீரர் சௌந்தரராஜன், காவல் துறையில் உயர்பதவியில் இருந்த எஸ்டி  ராஜன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான அருணாச்சலம், புஷ்பவதி, நடித்துள்ளதாகவும், மதன் கார்கி மற்றும் கபிலன் ஆகியோர் மிகத் தெளிவான பாடல் வரிகளை எழுதியுள்ளனர், இப்படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துள்ளார். மேலும் தமிழகத் திரை உலகின் முன்னணி நடிகரான விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் ஒரு அமைச்சர் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு இலக்கணமாக இப்படத்தில் அமைச்சர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்தோர் திட்டங்கள் குறித்தும் எதிர்கால நாட்டிற்கு என்ன என்ன நல்ல விஷயங்கள் வேண்டும் என்பதை ஒரு நல்ல அமைச்சராக இக்கதையில் வரும் அமைச்சர் அழகாக எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவித்தார், இத்திரைப்படத்தின் ட்ரைலர், மற்றும் பாடல் கோவையில், வெளியீடபட்டுள்ளதாக அவர் தெரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments