உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!!!

 -MMH 

கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான சதீஸ், இவர் கடந்த 2 ஆண்டுகளாக உயர் ரத்த அடுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.

 இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, இந்த நிலையில் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேற்று மீண்டும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இவரது மூளை நாளங்கள் வெடித்து தனது வீட்டில், மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். 

அரசு மருத்துவமனையில், மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதுகுறித்து இவரது சகோதரி சஹிதா மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, உயர் ரத்த அழுத்தம் காரணமாக இளைஞர் உயிரிழந்த சம்பவம் மதுக்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments