தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விழா கோவை குனியமுத்தூர் பாஜக மண்டல் சார்பில் நடைபெற்றது!!

   -MMH 

    கோவை: பாஜக 42 ஆம் ஆண்டு ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விழா கோவை  குனியமுத்தூர் பாஜக மண்டல்  சார்பில் குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வர்த்தக பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் என். கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் ஏ.பி முருகானந்தம் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களை கௌரவித்தார். தொடர்ந்த அவர் 60  தூய்மைப் பணியாளர்களின் கால்களை, கைகளால்  கழுவி அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் வி.ஜோதி, முன்னாள் மண்டல தலைவர் பாலகணேஷ் , முன்னாள் மண்டல் பொதுச்செயலாளர்கள் அருண், ஜெகதீஷ், வர்த்தகப் பிரிவு செயலாளர் நடராஜ், நிர்வாகிகள் சரவணன், சீனிவாசன், ராஜேந்திரன்,  பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments