தமிழக எல்லையோரத்தில் கேரளா அணைக்கட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்...!!

   -MMH 

   கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கேரள மாநில எல்லையான மீனாட்சி புறத்திற்கு அருகே உள்ள நெல்லி மேடு என்னும் பகுதியில் உள்ள சர்க்கார் குளம் என்னும் சிறிய அணைக்கட்டுப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர்.

இந்தச்சம்பவம் மீனாட்சிபுரம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சம்பவம் அறிந்து உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு உடல் ஆய்வுக்குக்குறுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக.  

-அலாவுதீன் ஆனைமலை.

Comments