கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!

   -MMH 

   கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மதநல்லினக்கத்தை வலியுறுத்தி இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செயல் தலைவர்  மயூரா ஜெயக்குமார்,  அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹாஜி, இனாயத்துல்லாஹ், ஹிலால் கமிட்டி தலைவர் ஹஜ்ரத் ரஹீம் இம்தாதி, பேரூராதினம் தம்பிரான் சுவாமிகள், கிறிஸ்தவ போதகர் பிரகாஷ், மஜக ஹனீப் தமுமுக சர்புதீன் எஸ்டீபிஐ இசாக் முஸ்லிம்லீக் இசாக்  ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் சிங்கை சுலைமான்,  ஹனீபா, ஜாபர்சாதிக், IKP மாவட்ட செயலாளர் முகமது மன்சூர், மற்றும்  தோழமை கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments