இப்படியெல்லாம் மோசடி பண்ணுவாங்களா என்ன மக்களே உஷார்..!!

   -MMH 

   திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கார்ப்பரேட் கம்பெனிக்கு தொலைபேசி தொடர்பு கொண்டு தானொரு ஏர் போர்ஸ் ஊழியர் என்றும் ஏர்போர்ட்டில் உள்ள ஒரு பார்க்கிற்கு ரோடு போட காங்கிரீட் தேவை என்று தனியார் கார்ப்பரேட் கம்பெனியில் பணிபுரியும் ஒருவருக்கு அழைத்து பேசியுள்ளார்.

அதற்கு அவரும் அவரின் தேவைகளை கேட்டறிந்து அடுத்த நாள் காலையில் கான்கிரீட்டை லாரியில் அனுப்பியுள்ளார். இங்குதான் அதிர்ச்சி காத்திருந்தது வண்டி உள்ளே வர அனுமதி சீட்டு பெற வேண்டும் என்றால் தங்களின் வங்கி என்னிலிருந்து தங்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பினால் ஏர்போர்ஸ் வங்கிக் கணக்கிலிருந்து தாங்களுக்கு பகுதி பணம் காங்கிரீட் கம்பெனியில் கணக்கிற்கு வந்தவுடன் அந்த காங்கிரட் வண்டிக்கு உண்டான கேட் பாஸ் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

அதற்கு கான்கிரீட்டில் வழி பணிபுரியும் அவர் என்னுடைய கணக்கை சரி பார்ப்பது என்று தாங்கள் ஒரு ரூபாய் அனுப்புமாறு வாக்குவாதம் செய்து வரும் வேளையில் கான்கிரீட்டில் வேலை செய்யும் நபர் சுதாரித்துக்கொண்டு உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கு அவர் நடந்ததைக் கூறியுள்ளார். ஆனால் காவல் நிலையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றது. தாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.

ஆகையால் தற்போது அதிகமாக பண மோசடிகள் வெவ்வேறு இடங்களில் நடக்கும் பொது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது இந்த சம்பவத்தில் விளக்கம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா.

Comments