மத்திய அரசின் போஷன் அபியன் நிகழ்ச்சி நடைபெற்றது!!

    -MMH 

   கோவை : மத்திய அரசின் போஷன் அபியன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கவுண்டம்பாளையம் முல்லை நகர் அங்கன்வாடிக்கு, பா.ஜ.க இளைஞரணி மாநில செயலாளர் எம். ப்ரீத்தி லட்சுமி சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 2 கழிப்பறை பயன்பாட்டிற்கு  வழங்கப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் மாநகர், மாவட்ட பொறுப்பாளர் ஏ.பி. முருகானந்தம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் மலர்கொடி முன்னிலை வகித்தார். தொடர்ந்து  மத்திய அரசினுடைய நலத்திட்டங்கள்  வழங்கப்பட்டது. 5 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் நிர்வாகிகள் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் சபரி கிரீஸ்,  அசோக்குமார், தேவிதாஸ், புவனேந்திரன், வெள்ளிங்கிரி, பரமேஷ், வினோ, காண்டியப்பன், பாலமுருகன் பலர் கலந்து கொண்டனர். 

- சீனி,போத்தனூர்.

Comments