ஹிந்து முன்னணி சார்பில், 'கோவில்களை காப்போம்; கோவையை காப்போம்' என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம்!!

   -MMH 

    கோவையில், ஹிந்து முன்னணி சார்பில், 'கோவில்களை காப்போம்; கோவையை காப்போம்' என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை காந்திபுரம், வி.கே.கே.மேனன் சாலையில், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, ஹிந்து கோவில்கள் அதிகளவில் அகற்றப்பட்டு வருவதாகவும், மத கலவரங்களை துாண்டும் வகையில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் கூறி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 'கோவில்களை காப்போம், கோவையை காப்போம்' என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் பேசுகையில், ''ஆக்கிரமிப்பு எனக்கூறி கோவில்கள் அகற்றப்பட்டு வருகின்றன. கோவையையும், கோவில்களையும் காப்பாற்ற வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என்றார்.ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர் குமார், அமைப்பாளர் பக்தன், மாவட்ட தலைவர் தசரதன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

-சுரேந்தர்.

Comments