பணிகுறித்தான கலந்தாய்வு கூட்டம்!!

   -MMH 

   கோவை தொண்டாமுத்தூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில், சத்துணவு கூடங்களில் பணியாற்றும் பணியாளர்களின், பணிகுறித்தான, கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது,

தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் தேசிங்குராஜன் கூட்டத்தில், கலந்து கொண்டு பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார், சத்துணவு பணியாளர்களின், சம்பளம், ஊதிய உயர்வு, போன்ற பல்வேறு குறைகள் குறித்தும் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டறிய பட்டது, இந்த கூட்டத்தில், பேரூர் வட்ட கிளை செயலாளர் கார்த்திகாம்பிகா, ஜோதி உள்பட, பல்வேறு பணியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments