சமைக்க பயனுள்ள பாத்திரங்கள் எவை?

   -MMH 

   உணவு நமது பசியை போக்கும் அதே வேளையில், அது சமைத்து பரிமாறப்படும் பாத்திரமும் முக்கியமானது. ரா பவுண்டேஷன் அனஹட்டா ஆர்கானிக் நிறுவனர் ராதிகாராதிகா ஐயர், கூற்றுப்படி, அனைத்து உணவுகளுக்கும் ஆற்றல் உள்ளது, அதனால்தான் அவை 'பிராணா' அதாவது 'உயிர் கொடுக்கும் சக்தி' என்று அழைக்கப்படுகின்றன.

நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரம், உங்கள் உணவு எவ்வளவு வேகமாக சமைக்கிறது, அதன் சுவை மற்றும் ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கிறது. ஆனாலும், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்கள் சமைப்பதற்கு தகுதியில்லாதவை. அப்படியானால் சமைக்க பயனுள்ள பாத்திரங்கள் எவை? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

1. மண்பானை

'இந்திய வரலாற்றில், மண் பானைகள் ஒரு பாத்திரமாக மட்டுமல்லாமல், உணவின் சுவையை அதிகரிக்க ஒரு வழியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அவை பாதுகாப்பானவை மற்றும் நச்சுத்தன்மையற்றவை,

பலன்கள்:

மண் பானையில் மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் அதிகம்.

மண் பானையில் சமைக்கும் போது குறைந்த அளவு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

மண் பானைகள் உணவின் ஊட்டச்சத்தை தக்கவைக்க உதவுகிறது.

மண் பானைகளில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் உங்கள் உணவில் ஊட்டச்சத்தை சேர்க்கிறது.

2. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்

ஸ்டீல்' உங்கள் உணவில் உள்ள பொருட்களை உண்மையில் ருசிக்க அனுமதிக்கிறது, இது சமைக்க மிகவும் ஏற்றது, சுகாதாரமானது.

இது மிகவும் நீண்ட காலம் நீடிக்கும்.

இது பல உணவுகளுக்கு சுவையை வழங்குகிறது.

சுத்தம் செய்து சேமிப்பது எளிது.

நீங்கள் அதை சுகாதாரமாக பராமரிக்கும் வரை மற்றும் நல்ல தரமான ஸ்டீல் பயன்படுத்தும் வரை ஆரோக்கியத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை.

3. இரும்பு

பல்வேறு வகையான உணவுகளை சமைக்க இரும்பு சிறந்தது.

அதன் சில நன்மைகள்:

இரும்பு அதன் கனத்தன்மை காரணமாக சமமான வெப்பநிலையை வழங்குகிறது; இரும்பு மற்ற பாத்திரங்களை விட அதிக நேரம் வெப்பத்தை வைத்திருக்கும்.

நம் உடலுக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அந்தவகையில், இரும்பு பாத்திரங்கள் உங்கள் உணவில் இரும்பை உட்செலுத்துகின்றன.

-சுரேந்தர்.

Comments