மோடிக்கு அழகிய விநாயகரை பரிசளித்த தமிழிசை!!

-MMH 

    பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக அழகிய விநாயகர் சிலை ஒன்றை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று பரிசளித்துள்ளார். புதுச்சேரி மற்றும் தெலங்கானா நிர்வாகம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தும் வகையில் புது தில்லி சென்று பிரதமர் மோடியை இன்று சந்தித்தார் தமிழிசை சௌந்தரராஜன். இதுகுறித்து தனது டுவிட்டரில்  அவர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், இரு மாநில நிர்வாகங்கள் மற்றும் திட்ட மேம்பாடுகள் குறித்து ஆலோசித்ததாகவும், புதுச்சேரி குறித்த அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
-S.வெங்கட்.

Comments