வாடகை வீட்டை காலி செய்வதில் தகராறு - போலீசார் விசாரணை !

 

-MMH

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மண்டலம் 27வது வார்டு மாநகர கவுன்சிலராக வெற்றி பெற்றிருப்பவர் திமுகவை சேர்ந்த சதீஷ். இவர் மீது தான் அடிதடி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தேடி வருவதால் கவுன்சிலர் தலைமறைவாகியுள்ளார். வேலூர் சத்துவாச்சாரியில் வசித்துவரும் சதீஷின் தந்தை ஜெய்சங்கருக்கு இரண்டு மனைவிகள் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆன ஜெய்சங்கர் தனது இரண்டாவது மனைவி குடும்பத்தை சத்துவாச்சாரியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார் 10 ஆண்டு காலமாக அந்த வீட்டில் அவர்கள் தங்கியுள்ளனர் வீட்டின் உரிமையாளர் சென்னையில் வசிக்கும் வாசன் என்பவர் உடையது .அவர் தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு  செய்தவர் வீட்டை காலி செய்யச் சொன்னதாக கூறப்படுகிறது. 

சதிஷ்ன் தந்தை வீட்டை காலி செய்ய மறுத்துள்ளனர் .பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். குடியிருப்பு வீடு  குடியிருப்போருக்கு வீடு சொந்தம் என ரூல்ஸ் பேசியுள்ளார். பல மாதங்களாக இந்த பஞ்சாயத்து நடந்து வந்துள்ளது இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி காலை வீடு காலி செய்யச் சொல்லி வாசன் தனது உறவினர்கள் உட்பட சிலருடன் காரில் அந்த வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை இந்த தகவல் ஜெய்சங்கருக்கு தெரிந்து அவர் தனது ஆட்களை சிலரை காரில் அங்கே அனுப்பியுள்ளார். அதற்குள் அவர்கள் வீட்டுக்குள் புகுந்தனர் இதனால் இரு தரப்புக்கும் அடிதடியாகியுள்ளது வீட்டின் உரிமையாளர் மற்றும் அவர்களுடன் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் தநரததன் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக சதீஷ் ஒரு ஆடியோ பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அந்த வீட்டிற்காக நாங்கள் சில லட்சம் அட்வான்ஸ் தந்துள்ளோம் .அதை தர மறுப்பதால் காலி செய்யவில்லை இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டினார்கள் நான் யாரையும் அடிக்கவில்லை திருநங்கையை நான் அடித்ததாக கூறுகிறார்கள் திருநங்கைக்கு நான் யாரென்று தெரியும் அவர்களும் பெண்களும் என்னை நல்லவன் என்று சொல்வார்கள்.

இதன் பின்னால் அரசியல் உள்ளது. அவர்கள் இதன் பின்னால் இருந்து திட்டமிட்டு என் மீது வழக்கு பதிவு செய்து வைத்துள்ளார்கள். நான் வேறு ஒரு அணி என்பதால் சிக்க வைத்துள்ளார்கள் என்கிறார். அதுபோல் இந்த விவகாரம் 5 மாதத்திற்கு முன்பே பஞ்சாயத்து வந்தபோது அந்த வீட்டை காலி செய்து தந்து விடுங்கள் என சொல்லியும் சதீஷ் குடும்பம் செய்யவில்லை என்கிறார்கள். 

-P. இரமேஷ் வேலூர்.

Comments