இஸ்லாமிய கட்சித் தலைவர்களை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர் மீது வழக்கு...!!

   -MMH 

   கோவை மாவட்டம் ஆனைமலை இந்திரா நகர் 4வது வீதியைச் சேர்ந்த அப்துல்லா மகன் அப்துல் வாகித் என்பவர் ஆனைமலை பேரூராட்சி என்ற வாட்ஸ்அப் குழுமத்தில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான M.H. ஜவாஹிருல்லா மற்றும் இஸ்லாமிய தலைவர்களை தகாத வார்த்தையில் பேசியும் ஜவாஹிருல்லா அவர்களின் உடல் நிலையை இழிவாக அவதூறு பரப்பும் விதத்தில் வன்மமாக பேசியும், மிரட்டல் விடுத்துள்ளதாக.

மேற்படி நபரால் சமூகப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி ஆனைமலை நகர மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சாகுல் அமீது அவர்கள் தலைமையில் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டத்தின் பேரில் ஆனைமலை காவல்துறையினர் அப்துல் வாகித் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது சம்பந்தமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments