தந்தையைக் கொன்று மகன் தப்பியோட்டம்!

 

-MMH

கோவை புலியகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கருப்புசாமி, 62. போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் துாய்மை பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி வசந்தா, மகன் சுரேஷ், மகள் வனிதா உள்ளனர். கருப்புசாமிக்கு அவரது மனைவி வசந்தா இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக வசந்தா, அவரை பிரிந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் வசிக்கும் மகன் சுரேஷ் வீட்டுக்கு சென்று விட்டார்.ஓராண்டுக்கு முன் பணி ஓய்வு பெற்ற கருப்புசாமிக்கு, 6 லட்சம் ரூபாய் ஓய்வூதிய பலன் கிடைத்தது. அந்த பணத்தை தனக்கு தரும்படி மகன் சுரேஷ் கேட்டார். கருப்புசாமி தர மறுத்து விட்டார். இதன் காரணமாக

இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுரேஷ் ஆத்திரத்தில் கத்தியால், தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார் இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.ராமநாதபுரம் போலீசார்  கருப்பு சாமியின் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிய சுரேஷை தேடி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments