வழக்கத்தை விட 10 சதவீதம் கூடுதல் மழை பெய்யக் கூடும்: வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்!!

    -MMH 

   தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களைத் தவிர, மீதமுள்ள 29 மாவட்டங்களில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் இடையே, தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், இயல்பான மழையே பெய்யும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் (ACRC) கணிப்புகள் தெரிவித்துள்ளன.

கோயம்புத்தூரில் 230 மிமீ மழை பெய்யும் என்றும், சராசரியாகப் பெய்யும் 210 மிமீ மழையை விட இது 10 சதவீதம் கூடுதல் (30 வருடத் தரவு) என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்மறையாகத் திருப்பூரில் 151 மிமீ எதிராக 150 மி.மீட்டரும்  ஈரோட்டில் 260 மிமீ எதிராக 255 மி.மீட்டரும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் சேலம் (450 மிமீ)  திண்டுக்கல் (350 மிமீ), தேனி (245 மிமீ), தென்காசி (200 மிமீ), தூத்துக்குடி (75 மிமீ), திருநெல்வேலி (160 மிமீ), கன்னியாகுமரி (610 மிமீ), திருவண்ணாமலை (505 மிமீ), காஞ்சிபுரம் (560 மிமீ), திருவள்ளூர் (540 மிமீ) ஆகிய மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் தெற்கு அலைவு குறியீடு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஆகியவற்றைப் படிப்பதன் மூலம் ACRC இந்த முன்னறிவிப்பை உருவாக்கியது. "ஆஸ்திரேலியன் ரெயின்மேன் இன்டர்நேஷனல் மென்பொருளைப் பயன்படுத்தி, நீண்ட கால சராசரி வானிலை அளவுகளை ஆய்வு செய்து முன்னறிவிப்பை உருவாக்கினோம்" என்று ACRC தலைவர் எஸ்.பி. ராமநாதன் கூறினார்.

வடகிழக்கு பருவமழையால் தமிழகம் அதிக மழையைப் பெறுகிறது. இருப்பினும், நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த அல்லது பராமரிக்கத் தென்மேற்கு பருவமழை முக்கியமானது என்பது கூடுதல் தகவல்.

விவசாயிகள் முன்னறிவிப்பின் அடிப்படையில் சாகுபடி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments