கோவை வரும் 2 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!!!

   -MMH 

    கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 2 ரெயில்கள், மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.

"கோவை - போத்தனூா் ரெயில் நிலையங்கள் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மே 23-ம் தேதி காலை 8.15 மணிக்கு பிலாஸ்பூரில் புறப்பட்டு 24-ம் தேதி மாலை 3.42 மணிக்கு கோவையை வந்தடையும் பிலாஸ்பூா் - எா்ணாகுளம் வாராந்திரச் சிறப்பு ரெயில் (எண்:22815) அன்றைய தினம் கோவை நிலையத்திற்கு வராது.  அதற்கு பதிலாக இருகூரில் இருந்து போத்தனூா் ரெயில் நிலையம் சென்றடையும். அங்கிருந்து எா்ணாகுளத்துக்கு இயக்கப்படும்.

இதேபோல, மே 24-ம் தேதி மாலை 4.30 மணிக்கு பாட்னாவில் புறப்பட்டு, 26-ம் தேதி மாலை 5.02 மணிக்கு கோவையை வந்தடையும் பாட்னா - எா்ணாகுளம் வாராந்திரச் சிறப்பு ரெயில் ( எண்: 22670) அன்றைய தினம் கோவை நிலையத்திற்கு வராது. அந்த ரெயில் இருகூரில் இருந்து போத்தனூா் ரெயில் நிலையம் சென்றடையும். அங்கிருந்து எா்ணாகுளத்துக்கு இயக்கப்படும். இந்த 2 ரெயில்களும் கோவை நிலையத்துக்கு பதில், போத்தனூா் நிலையத்தில் நின்று செல்லும்."அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.☝☝

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments