கோவையில் 650 ரேஷன் கடைகள் மூடல்!

 

-MMH

 கோவை அன்னூர் சில ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததாக கூறி சங்க செயலாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.

இதை கண்டித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனால் கோவை மாவட்டத்தில் 650 ரேஷன் கடைகள் நேற்று மூடப்பட்டன. மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள 146 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் நேற்று மூடப்பட்டன. இப்போராட்டம் குறித்து சங்கத்தின் மேற்கு மண்டல தலைவர் ரமணி, கோவை தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் கூறியதாவது: 

தரமற்ற அரிசி விநியோகம் செய்வதற்கு வருவாய் துறையினர் தான் பொறுப்பு.தரமான அரிசியை அவர்கள் வழங்க வேண்டும். சங்க செயலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக மே 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தெரிவித்தனர். ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தினால் ரேஷன் பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments