தூத்துக்குடியில் சூறைக்காற்றில் 75 பனை மரங்கள் வேரோடு சாய்ந்தன..!

    -MMH 

   வங்க கடலில் உருவான அசானி புயல் காரணமாக நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. தூத்துக்குடி கோரம்பள்ளம், அந்தோணியார்புரம் பகுதியில் வீசிய சூறைக்காற்றில், அப்பகுதியில் நின்ற சுமார் 75 பனை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பல்வேறு புயலையும் தாங்கி நின்ற பனை மரங்கள் தற்போது சூறைக்காற்றில் சாய்ந்ததால் பொதுமக்கள், பனை தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பனை தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ராயப்பன் கூறியதாவது:-வாழ்வாதாரம் பாதிப்பு தூத்துக்குடி அந்தோணியார்புரம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இங்கு கோரம்பள்ளம் குளத்துக்கு செல்லும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்றில், அப்பகுதியில் உள்ள பனைமரங்கள் பெரும்பாலும் சாய்ந்து உள்ளன.


இதுவரையிலும் இதுபோன்று சூறைக்காற்றில் பனை மரங்கள் சாய்ந்து விழுந்ததை பார்த்தது இல்லை. தற்போது கோடை காலத்தையொட்டி, பெரும்பாலான பனை மரங்களில் பதநீர் இறக்கப்பட்டு வந்தது. அவைகள் சாய்ந்து விழுந்ததால், பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-வேல்முருகன், தூத்துக்குடி.



Comments