கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்!!

   -MMH 

   கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார் மாவட்டங்களில், இன்று மிக கனமழையும், நாளை கனமழையும் பெய்யும். நாமக்கல், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும். சென்னையின் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யலாம் எனவும் மேலும் அரபி கடலின் தென் மாநில பகுதிகள், தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பகுதிகளுக்கு, இன்று முதல் 22ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களில், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments