இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் பெருநாள் தொழுகை நடைபெற்றது!!

இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் நடைபெற்ற பெருநாள் தொழுகை.

   இல்லாதவர்க்கு உதவும் ஈகை குணத்தையும், சகோதரத்துவத்தையும், பசியின் அருமையையும், உணவின் முக்கியத்துவத்தையும், உணர்த்தும் இந்த ஈகைத் திருநாள் வளைகுடா தேசங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. நாளை தமிழகத்தில் ரமலான் கொண்டாடப்படுகிறது. ஒரு சில சமூக இயக்கங்கள் பெருநாள் தொழுகையை இன்று நிறைவேற்றினர்.

அதன் ஒரு நிகழ்வாக ஆனைமலை JAQH கிளை சார்பாக ஆனைமலை SA மகாலில் இன்று காலை 7 மணி அளவில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. நகர தலைவர் சபீர் அவர்கள் தலைமையில் கோவை காஜா சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments