கோவையில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளின் துவக்கவிழா!!

   -MMH 

   கோவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு,அரிமா இயக்கம் மற்றும் தி.மு.க.சுற்றுச்சூழல் அணி சார்பாக,  கோவை புதூர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்தல் இலவச மருத்துவமனை கட்டுதல் நடை பாதை அமைத்தல் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்வுகளின் துவக்கவிழா, கழக தீர்மான குழு இணைச் செயலாளர் அரிமா முத்துச்சாமி ஏற்ப்பாட்டில் நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் மற்றும் திமுக முன்னாள் தலைவரும் ஆன முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் புதிய திட்டங்கள் அமைத்தல் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் மாவட்டம் கோவை புதூர் பகுதியில் அரிமா இயக்கம் திமுக சுற்றுச்சூழல் அணி இணைந்து கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை புதூர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்தல் இலவச மருத்துவமனை கட்டுதல் பார்க் மற்றும் நடை பாதைகள் அமைத்தல் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்வுகளின் துவக்கவிழா நடைபெற்றது.

கழக தீர்மான குழு இணைச் செயலாளரும் தளபதி இரத்ததான தகவல் மையத்தின் தலைவருமான அரிமா முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக உயர் நிலை செயல் திட்டக் குழு கண்ணப்பன்,சுற்றுச்சூழல் அணியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் மணி சுந்தர்,பன்னாட்டு அரிமா சங்கங்களின்  மாவட்ட தலைவர் அரிமா நடராஜன்,கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன்,மத்திய மண்டல தலைவர் மீனா லோகு,ஆகியோர்  கலந்துகொண்டு திட்டங்களை துவக்கி வைத்தனர்..முன்னதாக விழாவில் பேசிய, கழக தீர்மான குழு இணைச் செயலாளரும் தளபதி இரத்ததான தகவல் மையத்தின் தலைவருமான அரிமா முத்துசாமி,தமிழக முதல்வரின் முத்தான திட்டங்களை அனைத்து தர மக்களும் வரவேற்பதாக குறிப்பிட்டார். இரத்ததானம் குறித்த தகவல் மையத்தை கடந்த சில ஆண்டுகளாக தாம் நடத்தி வருவதாக கூறிய அவர்,சிறந்த தானமான இரத்த தானத்தை வழங்க இளைய தலைமுறையினர் முன் வரவேண்டும் என தெரிவித்தார்.. விழாவில் தி.மு.க.கழக மூத்த முன்னோடிகள்,உறுப்பினர்கள்,பகுதி,வட்ட கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments