பேரறிவாளன் விடுதலையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...!!!

    -MMH 

   ஆனைமலை முக்கோணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் பேரறிவாளன் விடுதலையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...!!! 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டு காலமாக  தண்டனை பெற்று வந்த  பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்ய தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாகவும் , திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாகவும்,  வெல்ஃபேர் பார்ட்டி அமைப்புகளின் சார்பாகவும் மே 18ஆம் தேதி புதன்கிழமை  ஆனைமலை முக்கோணத்தில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments