மதுபான விலை உயர்வு!! பாதிப்பை ஏற்படுத்தும் என்று வேதனையுடன் மதுபானப்பிரியர்கள்!!

 -MMH 

தமிழக அரசுக்கு அதிக வருவாய் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலமே கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி டாஸ்மாக் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. 

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலை அமைச்சரவை கூட்டத்தில்,  மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாராத்தில்  மதுபான விலை குவாட்டருக்கு ரூ.10, ஆப்புக்கு ரூ.20, புல்லுக்கு ரூ.40 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதேபோல்,  பீர் விலையும் 20 ரூபாய் வரை உயரும் என்று கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு ஒரு நாளைக்கு மதுபான விற்பனை மூலம் கூடுதலாக ரூ.5 கோடியே 44 லட்சம் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.1,974 கோடி அதிகமாக அரசுக்கு கிடைக்கும் என்று டாஸ்மாக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான விலை உயர்வதால், மதுபானப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் வருமானம் குறைந்துள்ள நிலையில், மதுபான விலை உயர்வு மேலும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

-கலையரசன், மகுடஞ்சாவடி.

Comments