நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லையா....!?

    நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், வரும் ஜூன் 30 2022க்குள் அதை செய்து முடிக்கவும்.

‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதில் மத்திய மாநில அரசுகள் தெளிவாக இருக்கின்றனர். இப்படி இருக்கையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலும் ரேஷன் பெற முடியும். முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது. தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ளது. நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், வரும் ஜூன் 30 2022க்குள் அதை செய்து முடிக்கவும்.

-Ln இந்திராதேவி முருகேசன் / சோலை ஜெய்க்குமார்.

Comments