பள்ளி மாணவ மாணவியருக்கான நோட்ஸ் விலை கிடுகிடு உயர்வு!

   -MMH 

    பேப்பர் உட்பட மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, பள்ளி மாணவ - மாணவியர் படிக்கும், நோட்ஸ்களின் விலை, 30 முதல், 50 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காகித ஆலைகளான, டி.என்.பி.எல்., சேசாய், பலார்பூர், ஜெ.கே., வேஸ்ட் கோர்ட்ஸ், ஆந்திரா பேப்பர் ஆலை ஆகியவற்றுக்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தது முற்றிலும் நின்று விட்டது.

காகித ஆலைகள் தங்கள் தயாரிப்பு பேப்பர் உள்ளிட்டவற்றின் விலையை, ஜன.,15 முதல் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.கடந்த, இரண்டு மாதத்தில் பேப்பர் விலையில், டன்னுக்கு, 30,000 ரூபாய் முதல், 50,000 ரூபாய் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி, அச்சுமை, கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியர் படிப்புக்காக நோட்ஸ்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பு நோட்ஸ்களின் விலையை, 30 முதல், 50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இதில், மல்டி கலர் நோட்ஸ்களின் விலை, 50 சதவீதமும், சிங்கிள், டபுள் கலர் நோட்ஸ்களின் விலை, 35 சதவீதமும், கலர் இல்லாமல் கறுப்பு வெள்ளை நோட்ஸ்களின் விலை,30 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இது பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புத்தக கடை உரிமையாளர் குமார் கூறியதாவது :மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, அனைத்து வகுப்பு நோட்ஸ்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, சில தனியார் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வகுப்பு துவக்கப்பட்டுள்ளதால், நோட்ஸ்களின் விற்பனை துவங்கி உள்ளது.

இதனால், ஆர்டர் கொடுத்தாலும் கடந்த காலங்களில் கடனுக்கு கூட நோட்ஸ்களை வழங்கிய நிறுவனங்கள், தற்போது பணம் செலுத்தினால் மட்டுமே நோட்ஸ்களை அனுப்புகின்றனர். இதனால், ஜூன் இரண்டாவது வாரம் பள்ளி திறக்கும் என்பதால், விற்பனைக்காக நோட்ஸ்களுக்கு பணம் செலுத்தி ஆர்டர் கொடுத்து வருகிறோம். என்று கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments