டயர் பஞ்சர் ஆனதால் பைக் ஓட்டியவர் மரணம்!!

   -MMH 

   கோவை போத்தனூர் சுந்தராபுரம் அடுத்து குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ், 45. மனைவி ஜோதி; தனியார் பள்ளி ஆசிரியர். இரு மகன்கள் உள்ளனர். நேற்று காலை புஷ்பராஜ் மதுக்கரை மார்க்கெட் ரோட்டிலுள்ள மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, பிளஸ் 2 பொது தேர்வு எழுத தனது இரண்டாவது மகனை பைக்கில் அழைத்து சென்றார். மகனை பள்ளியில் இறக்கி விட்ட பின், வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பைக்கின் ஒரு வீல் பஞ்சரானது. கட்டுப்பாட்டை இழந்த பைக், ரோட்டின் வலதுபுறத்திற்கு சென்று எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியது. படுகாயமடைந்த புஷ்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments