பெரியார் சிலைக்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விடுதலை சிறுத்தையினர்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல அமைப்பு செயலாளர் சுசி கலையரசன் அவர்கள் தலைமையில், இன்று, காந்திபுரம், பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது,
இதனைக் குறித்து சுசி கலையரசன் கூறியதாவது,
"ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விடுதலை என்பது, திராவிடத்திற்கே கிடைத்த வெற்றி, இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments