விரலை துண்டாகக் கடித்த சிங்கம்..!! வைரலாகும் வீடியோ..!!
உயிரியல் பூங்கா காவலர் பார்வையாளர்களை கவரும் வகையில் சிங்கத்தின் கூண்டுக்குள் கையை விட்டதால் அந்த இளைஞனை சிங்கம் கடித்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜமைக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிங்கத்தின் கூண்டுக்குள் கையை விட்டதும் தலையை அசைத்து அதன் கோபத்தை வெளிப்படுத்தியது. அந்த இளைஞன் சிங்கத்தை ஆத்திரமூட்டும் விதமாக தூண்டினார். அப்போது அந்த இளைஞனின் விரலை கடித்து சிங்கம் தாக்கத் தொடங்கியது.
பார்வையாளர்கள் நேரில் கண்ட காட்சிகளை வீடியோ பதிவு செய்தார்கள். அதை ரசித்து சிரித்துக்கொண்டே வீடியோவும் எடுத்துள்ளனர். போராட்டத்தின் முடிவில் சிங்கம் அவரது விரலின் சதையைக் கடித்தது. அந்த இளைஞனுக்கு எலும்பு மட்டுமே திரும்ப கிடைத்ததாக கூறப்படுகிறது. காணொளியை பாருங்கள்.
-ஒற்றன்
Comments