ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலிருந்து சரக்கு ரயில் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது : தொழிலாளர்கள் மகிழ்ச்சி...!!


   -MMH 

    கோவை: ராஜஸ்த்தான் மாநிலம் கோட்டாவிலிருந்து சோயா பீன்ஸ் 2600டன் சரக்கு ஏற்றி புறப்பட்ட ரயில், கோவை மாவட்டம்  பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. காலை   முதல், 100க்கும் மேற்பட்ட  கலாசுத் தொழிலாளர்கள் சரக்கை இறக்கி லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். ரயிலில் வந்த சோயா, 140 லாரிகளில் ஏற்றப்பட்டு, மீன்கரை ரோடு, வளந்தாயமரம் அருகிலுள்ள தனியார் தொழிற்சாலைக்கு, கொண்டு செல்லப்பட்டன. சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் சரக்கு வரத்தால், கலாசுத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments