மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை!

-MMH

   கோவை போத்தனூர் லோகநாதபுரம் முதலியார் வீதியை சேர்ந்தவர் மல்லையாசாமி (வயது 65),  இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு பவானி சங்கர் (வயது 38), சத்தியநாராயணன் (35) என்ற 2 மகன்கள் இருந்தனர்.  இவருடைய மூத்த மகன் பவானிசங்கருக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இளைய மகன் சத்தியநாராயணன் திருமணமாகிவிட்டது. அவர் தனது பெற்றோர் வீட்டின் அருகிலேயே தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி உயிரிழந்துவிட்டார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன் பவானி சங்கரை மல்லையாசாமி கவனித்து வந்தார்.சத்தியநாராயணன், தனது தந்தை மற்றும் அண்ணனை தினமும் சென்று பார்ப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் மாலையில் தனது தந்தை மற்றும் அண்ணனை பார்க்க சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.  பலமுறை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.அங்கு தனது தந்தையும், அண்ணனும் சாணி பவுடரை (விஷம்) குடித்துவிட்டு மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மல்லையாசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பவானி சேகரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனுக்கு விஷம் கொடுத்து தந்தையும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 -அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments