ஆனைமலை முக்கோணம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி..!!

   -MMH 

   விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி..!!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 13-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக  மே 23-ஆம் தேதி திங்கள்கிழமை  மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் அ. அப்பன்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை அ. நித்தியபிரசாத் வரவேற்புரையும் மாவட்ட செய்தி தொடர்பாளர்வெ.தமிழ்க்குமரன் தொடக்கவுரையும் நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கா. வேல்முருகன் முன்னிலை வகித்தார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சுசி.கலையரசன், செ.வீரமணி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், திராவிடர் விடுதலைக்கழகம், தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம், ஆதித்தமிழர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், தமிழரசு கட்சி திராவிடர் கழகம் போன்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நரிக்கல்பட்டி மூர்த்தி நன்றி உரை கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.Comments