'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' !

   -MMH 

   50 ஆண்டுகால போராட்டம் கிடைக்குமா சாலை என இயங்கும் மலை கிராம மக்கள்.

 ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. கண்ணீர் விட்டு கதறும் மலைகிராம மக்கள். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட அண்ணாமலை ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலை இல்லாமல் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலத்தை கிராம மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று பெங்களூரில்  உணவகம் நடத்தி வந்த சரவணன் என்பவர் உயிரிழந்தார்.இன்நிலையில் அவரது சடலத்தை உறவினர்கள் உதவியுடன் கிராம மக்கள் டோலி கட்டி தூக்கிச் சென்று வருகின்றனர். 

P. இரமேஷ் வேலூர்.

Comments