பேருந்து டிப்பர் லாரி உடன் நேருக்கு நேர் மோதல்!!

 
    -MMH 

   கோவை மாவட்டம்  பொள்ளாச்சி வால்பாறையிலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து 30வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் எதிரே வந்த  டிப்பர் லாரி உடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்தக் கோர விபத்தில் உயிர்பலி எதுவும் ஆகவில்லை என்றாலும் லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்தின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments