பொள்ளாச்சி சாலைகளில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள்..!!

   -MMH 

   பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மிகுந்த ரோட்டில், விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு அதிகரித்து, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அதனை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சி நகரில் பாலக்காடு ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு , தேர்நிலை, ராஜாமில் ரோடு, நியூஸ்கீம் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் பகல் இரவு என தொடர்ந்து போக்குவரத்து உள்ளது. 

ஆனால், இந்த வழித்தடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக நியூ ஸ்கீம்ரோடு, கோவை ரோடு, பாலக்காடு ரோடு பஸ் நிலையம் அருகே, உடுமலை ரோடு தேர்நிலை, மார்க்கெட்ரோடு பகுதிகளில் ஆங்காங்கே ரோட்டோரம் நிறுத்தி செல்லப்படும் வாகனங்களால் பொதுமக்களுக்கு இடையூறு அதிகம் ஏற்படுவது மட்டுமின்றி, சிரமத்தால் வேதனையை உண்டாக்குகிறது. 

அதிலும் வணிக வளாகங்கள், கடைகள் நிறைந்த பகுதியும், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமுமான பாலக்காடு ரோடு, நியூஸ்கீம் ரோடு மற்றும் பஸ் நிலையம் அருகே பாலக்காடு ரோடுகளில் ரோட்டை அடைத்தவாறு ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுவது தொடர்கிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து போலீசார், அதில் நோ பார்க்கிங் என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தனர்.

ஆனால், அதையும் மீறி போக்குவரத்து மிகுந்த ரோட்டோரம், வாகனங்களை நிறுத்தி செல்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர். முக்கிய ரோட்டோரம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்படுவதால், அந்த வழியாக செல்லும் பிற வாகனங்களுக்கு அதிகளவு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகரில் போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூரை தவிர்க்க, ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதை, போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்

பொள்ளாச்சி.

Comments