வங்கி மேலாளர் வீட்டில் நகை திருட்டு!!

    -MMH 

   கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் நடராஜன் நகர் 7-வது வீதியை சேர்ந்தவர் பிரபு.

இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். பிரபு சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சென்றுள்ளார்.

வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட  மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகைளை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பிரபு, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை  மேற்கொண்டு நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த திருட்டுச் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments