தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை OBC பட்டியலில் சேர்த்திட வேண்டும்! - அகில இந்திய மள்ளர் பேரவை ஆர்ப்பாட்டம்.

   -MMH 

   கோவை: தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை OBC பட்டியலில் சேர்த்திட வேண்டும்- அகில இந்திய மள்ளர் பேரவை ஆர்ப்பாட்டம். 

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை SC பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றி OBC பிரிவில் சேர்த்து இட வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அகில இந்திய மள்ளர் எழுச்சிப் பேரவை தலைவர் மனுநீதிச் சோழன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனு நீதி சோழன், இதற்கு முன்பாகவே தேவேந்திர குல வேளாளர் சமூகம்  OBC பட்டியலில்தான் இருந்ததாகவும் 1936ல் SC பட்டியலுக்கு மாற்றி உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து ஓராண்டிற்கு முன்பு மத்திய அரசுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில் மாநில அரசு இது குறித்து பரிசீலனை செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்தும் மாநில அரசு கடந்த 8 மாதங்களாக மாநில அரசு  எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.  இதனால் SC பிரிவினருக்கு வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படுமே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து சமூகத்தினருக்கும் சலுகைகள் வழங்ப்பட்டுதான் வருவதாகவும் SC பட்டியல் மக்கள் உயர் பதவிகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்றும் எனவே தங்களை முன்பிருந்தவாரே OBC பட்டியலில் சேர்க்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் மற்றும் இந்திரசேனா அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments