உடுமலை பிரியா எலும்பு முறிவு மூட்டு நோய்சிகிச்சை மருத்துவமனையின் 25 ம் ஆண்டு வெள்ளிவிழா!!

   -MMH 
              

      திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பிரியா எலும்பு முறிவு மூட்டு நோய் சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு வெள்ளிவிழாவை கொண்டாடும் விதத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவர்கள்,ரோட்டரி சங்க உறுப்பினர்கள், இராணுவ வீரர்கள் நலசங்கத்தினர் மற்றும் இந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு கொடுத்த நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் அழைத்து அனைவருக்கும் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் S.சுந்தரராஜன் அவர்கள்  அவரது துணைவியார் கோகிலா சுந்தரராஜன், புதல்வன் நித்தவின்சிவா ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கி நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை பணியாளர்கள் பிரியா நர்சிங் கல்லூரி முதல்வர் தவசுமணி மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தார்கள். விழாவிற்க்கு வந்த விருந்தினர்கள் மருத்துவர் S.சுந்தரராஜன் அவர்களுக்கு பொன்னாடைகள் அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள். நிகழ்ச்சியில்  நூற்றிற்க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments