77 வது மாமன்ற உறுப்பினரின் சிறப்பான பணிகள்!!

 

    -MMH 

   கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 77 வது வார்டில் சொக்கம்புதூர் அருள் கார்டன் பகுதியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில்( நகர் நல மையம்) கட்டுமானப் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு. மோ.ஷர்மிளா அவர்கள் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு .ரா. வெற்றிச்செல்வன் அவர்கள் தெற்கு மண்டல தலைவர் திருமதி தனலெட்சுமி அவர்கள் மாமன்ற உறுப்பினர் திருமதி ராஜலட்சுமி எம்பிஏ அவர்கள்.

உதவி செயற்பொறியாளர் திரு கருப்பசாமிஅவர்கள். உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி சத்யாஅவர்கள் மண்டல சுகாதார துறை ஆய்வாளர் திரு ராமு அவர்கள்   மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாமன்ற உறுப்பினரின் பணிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்!! 

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments