கோவை குளங்களில் படகு சவாரி திட்டம்! மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!!

 

-MMH

 கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம், குமாரசாமி குளம் மற்றும் செல்வாம்பதி குளம் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை வாலங்குளத்தை பொறுத்தவரை மூன்று வேளையாக பிரித்து ரூபாய் 115.11 கோடியில் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி மற்றும் கிளாசிக் டவர் பகுதியில் உள்ள கரை கிழக்கு கரை பகுதிகளில் வேலை முடிந்து இருக்கிறது. வடக்குக் கரையில் கேபியான் தொழில்நுட்பத்தில் கருங்கற்கள் பாதிக்கப்பட்டு கான்கரீட் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வருவாய் ஈட்டும் வகையிலும் பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையிலும் படகு சவாரி இயக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் மாநகராட்சி புத்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதன்படி கோவை உக்கடம் வாலாங்குளத்தில் படகு சவாரிக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. டிக்கெட் கொடுப்பதற்கான கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. பெடல் படகுகள், மோட்டார் படகுகள் மற்றும் தண்ணீரில் சைக்கிள் ஓட்டுவதற்கான படகுகள் தருவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில் கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள ஒன்பது குளங்களில் 7ல் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகின்றன முதல் கட்டமாக வாலாங்குளத்தில் படகு சவாரி விடப்படும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது இம்மாதம் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அடுத்ததாக உக்கடம் பெரியகுளத்தில் நடைப்பயிற்சி பாதை, மிதிவண்டிப் பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கும் படகு சவாரி துவங்க படகுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments