தூத்துக்குடி மாவட்டம் அரியநாயகிபுரம் கிராமத்தில் கந்தூரி விழா மக்கள் மகிழ்ச்சி..!!

 

-MMH

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அரியநாயகிபுரம் கிராமத்தில் கந்தூரி விழா மூன்று நாட்களாக மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது இந்த விழாவில் பெருமானார் முகமது நபியின் பிறந்தநாள் கொண்டாட்டமாக  துவங்கப்பட்டு,

நபி பெருமானின் நற்செய்திகளை மக்களுக்கு நினைவு கூறும் வகையிலும், சிறுவர் சிறுமியருக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் இறுதிநாளான நேற்றுஅனைத்து தரப்பட்ட மக்களையும் அழைத்து சமபந்தி விருந்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை சிறப்பாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜி மார்க்கண்டேயன் அவர்கள் துவங்கி வைத்து.இது போன்ற அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொண்டு இந்த சமபந்தி நடைபெற்றது தமக்கு மன மகிழ்ச்சி அளிப்பதாகவும்,

விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்.சிறப்பாக நடைபெற்ற கந்தூரி விழாவை அரியநாயகிபுரம் ஜமாத்தார்களும்,

அரியநாயகிபுரம், சென்னை. வாழ் ஜமாஅத் தலைவர். துணைத் தலைவர். பொருளாளர். செயலாளர். அவர்களும் உள்ளூர் வளர்பிறை நண்பர்களும் உறவுகளின் முற்றம் இணைந்து சிறப்பாக விழாவினை சிறப்பித்தது. அந்த ஊர் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர், 

-ஈசா.

Comments