விதவிதமான சிகை அலங்காரம் செய்யும் சலூன் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை!

   -MMH 

     வேலூர்: பள்ளிகள் திறப்பதால் மாணவர்களுக்கு சீராக தலை முடியை வெட்ட வேண்டும். வித விதமாக சிகை அலங்காரம் செய்யும் சலூன் கடைகள் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று 21 ஜூன் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிகள் திறப்பதால் மாணவர்களுக்கு சீரான தலை முடி வெட்ட வேண்டும். மேலும் விதவிதமாக சிகை அலங்காரம் செய்யும் சலூன் கடைகள் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடையும் உரிய முறையில் தைத்துத் தர வேண்டுமெனவும் தையல் கடைகாரர்களை  அறிவுறுத்தினர் . 

-P. இரமேஷ் வேலூர்.

Comments