மத்திய அரசின் மானியத்தை பெற்று தரும் நிறுவனம் கோவையில் திறக்கப்பட்டது!!

    -MMH 

   ஏழை எளிய மக்கள் வீடு கட்ட மத்திய அரசின் மானியத்தை பெற்று தரும், ரெகாபாத் கோ ஆப்ரட்டிவ், பில்டிங், சொசைட்டி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சமீபத்தில் கோவை அண்ணா சிலை பகுதியில் திறக்கப்பட்டது.

பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகின்ற ரெகாபாத் கோ ஆப்ரட்டிவ் பில்டிங் சொசைட்டி லிமிடெட் நிறுவனமானது மத்திய அரசின் திட்டங்களுக்கு உறுதுணையாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் சமீபத்தில் கோவை அண்ணா சிலை பகுதியில் திறக்கப்பட்டது. இதனை பப்புவா நியூ குனியா நாட்டின்  இந்தியாவுக்கான வர்த்தக தூதர் மற்றும்  திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த விஷ்ணு பிரபு  குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது,

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல இந்நிறுவனம் பெரும்பங்கு வகித்து வருகின்றது. மத்திய அரசின் திட்டமான ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்க்கு வழங்கப்படுகின்ற மாணியத்தை பெற்று தருவது, விவசாயத்தை மேம்படுத்துவதற்காக கூட்டு பண்ணையம் திட்டம் எனும் திட்டத்தை  தற்போது கொடைக்கானலில் செயல்படுத்தி வருகின்றதாகவும் அத்திட்டம் கோவையிலும் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்தார். இத்திட்டமானது, விவசாயிகளிடம் உள்ள விலை நிலங்களை நேரடியாக லீஸ் முறையில் பெற்று அந்த நிலங்களில் விவசாயம் செய்து பொருட்களை சந்தை படுத்துதல் மேலை நாடுகளில் உள்ளது போன்று விவசாயிகளின் நிலங்களில் தற்காலிக பண்ணை வீடுகள் அமைத்து சுற்றுலா பயணிகளின் தேவைக்கு பயன்படுத்தும் திட்டத்தை மேம்படுத்தி சுற்றுலா துறைக்கு வருவாய் ஈட்டுதல் போன்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் மேலும் இச்சங்கத்தில்  உள்ள  உறுப்பினர்களுக்கு சிவில் ஸ்கோர் இல்லாமல் கட்டில், பீரோ போன்ற பல்வேறு பொருட்களுக்கான நிதிஉதவி வழங்குவது, கோவை - இராமேஸ்வரம் இடையிலான பேருந்து சேவை வழங்கி வருவதாகவும் இனி வரும் காலங்களில்  தமிழகம் முழுவதும் இச்சேவை அளிக்க பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இச்சங்கத்தின் தலைவர் எஸ் கார்த்திக்ராஜ், துணை தலைவர் பிரபு மற்றும் இயக்குனர்கள் மகேஷ் வரன், ஆனத்தன், ஜான்சிராணி, அருண், வெங்கடாச்சலம், ஆகியோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.

Comments