பொன்னையராஜபுரத்தில் தெருமுனை பொதுக்கூட்டம்!

 -MMH 

முத்தமிழறிஞர் செம்மொழிக்காவலர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலில், கோவை மாநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற, 

திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம், கோவை மாநகர்  73வது வார்டு பொன்னையராஜபுரம் பகுதியில், கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி. ஆர். ராமச்சந்திரன் முன்னாள். எம்எல்ஏ அவர்கள் தலைமையில், கோவை மாநகராட்சி நகரமைப்பு மற்றும் அபிவிருத்திக்குழு தலைவர் சோமு என்கிற சந்தோஷ் முன்னிலையில், நடைபெற்றகூட்டத்தில் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் குடியாத்தம் குமரன் சிறப்புரையாற்றினார்.

 இந்நிகழ்வில் மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை மாமன்ற உறுப்பினர் பத்மாவதி, வட்ட பொறுப்பாளர்கள் காளிமுத்து, செல்வராஜ், பிரமோத், அமிர்தவல்லி, மணல் ஆறுமுகம், மந்திரமூர்த்தி, இளைநரணி நஷீர் ராகுல், ஸ்ரீனிவாசன், சந்துரு, செந்தில், தொழில்சங்க விஜி, சந்துரு, பாஷா, சிவகுமார், செல்வராஜ், பரமேஸ்வரன், இளங்கோ, மருதாச்சலமூர்த்தி, புருசோத்தகுமார் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்!!

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments