தவறவிட்ட பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த முதல்வர் தனிபிரிவு பெண் காவலர்!

     -MMH 

    வேலூர்;தமிழக முதல்வர்  வேலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றி முடித்து பின்பு ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு சென்றுவிட்டார். அப்போது சென்னையில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த  (CORCELL SECORTY பணியில் இருந்த WGR1 54570 PAVITHRA )  பவித்ரா என்ற முதல்வரின் தனிப்பிரிவு பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் விழா முடிந்த பின்பு மேடைக்கு கீழே இருந்து கிடைத்த ரூபாய் 3020/- எடுத்து வந்து வேலூர் உட்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரிடம் பணத்தை ஒப்படைத்தார். பெண் காவலரின் இச்செயலை வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் பாராட்டினார். 

-P. இரமேஷ் வேலூர்.

Comments