பேருந்து மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!!

   -MMH 

     சென்னை: மாற்றுத்திறனாளி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சோழிங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த மாநகர அரசு குளிர்சாதன பேருந்து மேம்பாலத்தில் ஏறும்போது எதிர்பாராத விதமாக மாற்றுத்திறனாளியின் வாகனத்தின் மீது மோதியது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி மீது பேருந்து ஏறி இறங்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுறித்து அறிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழிச்சி தங்கபாண்டியன் மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை..

Comments