ரோட்டில் தவறவிட்ட பணம்! கண்டு எடுத்த நபர் திருப்பி ஒப்படைப்பு!! வாழ்க மனித நேயம்!!!


   -MMH 

   பெரியநாயக்கன் பாளையம் அருகே ரோட்டில் தவறவிட்ட, 2 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாயை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசிப்பவர் சுரேஷ்,37. இவர் நகை வாங்குவதற்காக 2 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாய் கூடை பையில் வைத்து இரு சக்கர வாகனத்தின் பின்புறம் உள்ள கொக்கியில் மாட்டி கொண்டு சென்றார். கோவை செல்லும் வழியில் என்.ஜி.ஜி.ஓ., காலனி பிரிவு அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த பையை காணவில்லை. இதுகுறித்து சுரேஷ் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டின் அருகே வசிக்கும் ஒரு நபர் பணத்தை அவர் தவறவிட்டதை எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. போலீசார் பணத்தை மீட்டு சுரேஷிடம் ஒப்படைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments